திங்கள், 29 ஜூலை, 2013

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முஸ்லிம்கள் ஏற்க முன் வராதது ஏன்



 பிறப்பு விகிதம் குறைந்தாலேயொழிய இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இல்லை. தனிமனித சராசரி வருமானமும் உற்பத்தியும் மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் வளராததால் வளர்ச்சி என்பதே கிட்டத்தட்ட இல்லாத நிலை. இப்படி இருக்க மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஏன் அவசியமானதாக நினைக்கிறார்கள். அதற்காக குழந்தையே வேண்டாம் என்று கூறவில்லை. கட்டுப்படுத்தி கொள்ளத்தானே கூறுகிறோம் - என்று கூறி அதற்காக பெரும் அளவில் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது.

'குழந்தைப் பேற்றை கட்டுப்படுத்துங்கள். அடிக்கடி மகப்பேறு அன்னைக்கு ஆபத்து' என்று கூறிய அரசு விளம்பரப்பலகைகள் பின் ' நாம் இருவர் நமக்கு இருவர்' என்றது. பிறகோ 'நாமிருவர் நமக்கொருவர்' என்றது. இப்போதோ'நாமே குழந்தைகள் நமக்கேன் குழந்தைகள்' என்று கூறத் துவங்கி விட்டது.

குழந்தைப் பேற்றை கட்டுப்படுத்துங்கள் என்று கூறியவர்கள் இப்போது குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். குழந்தையே வேண்டாம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தன வாதம். குழந்தை இல்லாத தம்பதிகளின் நிலை எந்த அளவிற்கு பரிதாபமாக உள்ளது என்பதை நிதர்சனமாக காண்கிறோம். குழந்தைகள் மூலமாகப் பெறும் மகிழ்வு இணையற்ற ஒரு மகிழ்வு என்பதை அதை அனுபவித்தவர்கள் அறிவர். இத்தகைய மகிழ்வுக்குரிய ஒன்றை வேண்டாம் என்று தள்ளும்படி உபதேசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின் தனக்குரிய உணவுத் தேவையைக் கூட தாமே சம்பாதித்துப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிறரை உணவுக்காக நம்பி இருக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு ஏதேனும் மாயாஜாலத்தின் மூலம் அமுலாக்கப்பட்டால் உடல் பலகீனமானவன்களுக்கு சாப்பாடு போட யாருமே இல்லாமல் போய்விடுவார்கள். பெற்றோர்கள் தம் வயதான காலத்தில் உயிர் பிழைக்க வேறுவழியில்லாததால் குழந்தைகளை மட்டுமே நம்ப வேண்டியிருக்கிறது. ஆயுள் பாதுகாப்பு, சேமிப்பு, நிலையான சொத்து, ஓய்வூதியம், பிற வழியிலான வருமானம் ஆகியவை அதிகபட்சம் ஐந்து சதவிகித மக்களைக் கூட சென்றடையாத நம் நாட்டில் குழந்தைகள் பெறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்பது எத்தகை விபரீத பிரச்சாரம். அப்படியானால் வயதானவர்களை பட்டினிக்கிடந்து சாகச் கொல்கின்றார்களா?

உலகில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாய் 20 வயதுக்குட்பட்டோர், 20-65 வயது கொண்டோர், 65 வது தாண்டியோர் என்று மக்கள் தொகை மூன்று பிரிவாய் பிரிக்கப்படும். இதில் 20-65 வயது கொண்ட இரண்டாம் பிரிவு உழைக்கும் வயது மக்கள்தொகை (றுழசமiபெ யுபந Pழிரடயவழைளெ) எனப்படும்.

65 வயதுக்கு மேற்பட்ட மூன்றாம் பிரிவினர் அதிகரித்து இரண்டாம் பிரிவினர் குறைந்து வருவதை விவாதிக்க சமீபத்தில் ஐ.நா.மன்றத்தில் ஒரு மாநாடு நடந்தது. பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் சமூக பொருளாதார வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில்

'80 வயது தாண்டிய முதியோர் எண்ணிக்கை பெருகுவதால் அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் குடும்பப் பொறுப்புகள் நலிந்தோர் நலன்கள் மற்றும் மருத்துவ வசதிகள் என்ற பல திட்டங்கள் தீட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன. ஒரு குடும்பம்! ஒரு குழந்தை! என்று சீனாவில் கடைபிடிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம், முதியோர் தொகை அதிகரித்து இளையோர் தொகை குறைய ஒரு காரணம்' என்று மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

1979-ல் சீனா அரசு தன் நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை திணித்தது. இதனை மீறியவர்களின் குடும்பத்துக்கு வீட்டுவசதி, இதர சலுகைகளை சீன அரசு தர மறுத்தது. இதனால் நடந்தது என்ன? பிறந்த ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால் அந்த குழந்தையை கொல்வதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டியதில்லை. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை கொல்கின்ற கொடூரமான காரியங்களைச் செய்யும் பெற்றோர்கள் அதை நிறுத்த வேண்டும் இல்லையேல் அது குடும்ப நலவளர்ச்சித் துறையை பெரிதும் பாதிக்கும் என்று யுடுடு ஊர்ஐNயு றுழுஆநுNளு குநுனுநுசுயுவுஐழுN பிரச்சாரம் செய்தது. (Pசழடிழவாயயெஅ றுநநமடல 19.3.83)

1975-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்து போது நெருக்கடி நிலை (மிசா) சட்டம் அறிவிக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாடுமுறை கட்டாயமாக ஆக்கப்பட்டபோது பலர் பாதிப்படைந்தனர். இதனால் மிகப் பெரும்பான்மையினர் இந்திராகாந்தியை தோற்கடிக்கவும் செய்தனர்.

ராஜஸ்தான் போன்ற இடங்களில் கடந்த நூற்றாண்டுவரை மக்கள்தொகைக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை போன்றவை கொடூரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது நம்மில் பலரும் கேட்க விரும்பாத அதிர்ச்சி தரும் செய்தி.

'500 செலவழித்து 5 லட்சம் சேமியுங்கள்' என்னும் விளம்பரம் பலகையை ஆங்காங்கே நாம் காணலாம். 500 செலவு செய்து ளுஉயn செய்து பாருங்கள். கர்ப்பப்பையிலிருக்கும் சிசு பெண் சிசுவாக இருந்தால் கலைத்துவிடலாம். இதனால் எதிர்காலத்தில் செய்யும் 5 லட்சம் திருமணச் செலவை தவிர்க்கலாம் என்கிறது அவ்விளம்பரம்.

குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு அதை கொல்ல மனமின்றி அனாதை இல்லங்கள் முன்போ பொது இடங்களிலோ வீசிவிட்டுப் போவதையும் அப்போதுக்கப்போது அறிகிறோம்.

ஒரு குழந்தை போது என்ற நிரந்தர கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் அந்த ஒரு குழந்தையையும் நோயின் காரணமாகவோ, விபத்தின் காரணமாகவோ இழக்க நேரிட்டால் பெற்றோர்களின் நிலை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். இனி குழந்தைப் பெற்றுக் கொள்ள வழியே இல்லை. வாரிசும் இல்லை என்று ஏங்கி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

சமூக நலம் என்று கூறி தனி மனிதர்களுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அவசியம் தானதா என்பதை அதன் ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

பெருகிவரும் நகர ஜனநெருக்கடியை குறைக்க பொருளாதார உற்பத்தி குறைவை சமாளிக்க மக்கள் தொகை குறைப்பு தான் தீர்வு என்று சிந்திப்பதை விட பொருளாதார உற்பத்தியை பெருக்குவதற்கான ஆய்வை மேற்கொள்வதே சிறந்த வழிமுறையாகும்.

பரந்த இந்த பூமியில் மனிதர்களின் காலடிப்படாத வாழத்தகுந்த இடங்கள் ஏராளம் உண்டு. மனிதர்கள் ஒரிடத்தில் குவிந்து ஜனநெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் விதமான புறநகர்பகுதிகளிலும், கிராமங்களிலும் மக்கள் வாழ்வதற்குரிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். நீதிமன்றம், கல்லூரி, அரசு அலுவலகங்களை புறநகர்ப் பகுதிகளில் அமைக்கலாம்.

நெருக்கடி சிக்கல் ஏற்படும் போது தான் மனித்ன அதிகமாக சிந்திக்கிறான். அன்று குடிசைகளிலும், சிறு சிறு கட்டிடங்களிலும் வழ்ந்து வந்தவன் இன்று பல அடுக்குமாடிகளை எழுப்பும் வகையில் வளர்ச்சியடைந்திருக்கிறான். பயிர் செய்தால் 6 அல்லது 8 மாதத்தில் அறுவடை செய்யும் நிலை மாறி 40 அல்லது 30 நாட்களில் அறுவடை பயிர்வகைகளைக் கண்டுபிடித்துள்ளான். கோழி குஞ்சு பொறிக்க 21 நாட்கள் எடுத்துக் கொண்டது அந்த காலமாகிவிட்டது. ஒர சில மணி நேரத்தலே கோடிக்கணக்கான குஞ்சுகள் பொறிக்கும். வழிவகைகளை மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

உற்பத்தியை பெருக்கும் அறிவை மனிதன் பெற்றிருந்தும் வறுமை தாண்டவமாடுகிறது என்றால் அதற்கு முயற்சியின்மையும். விநியோகமும் சரியில்லாததேயாகும். பயிர் செய்ய நிலமிருக்கிறது. உற்பத்தியை பெருக்க உழைக்க மனிதர்களை தான் இல்லை. அனைவரும் உழைத்து உண்பது என்ற நிலை ஏற்படுமானால் உற்பத்தியாகும் உணவi மக்கள் உண்டு போக ஏராளம் ஏஞ்சவே செய்யும். அதற்கான வழிவகையை செய்வதும் ஆர்வமூட்டும் செயலில் அரசு ஈடுபடுவதே சிறந்தததே தவிர ஜனத்தொகையை கட்டுப்படுத்துவது தான் தீர்வு என்னும் வாதம் அறிவுடைமையாகாது.

இன்றிருக்கும் ஜனத்தொகையில் பாதிதான் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது எனினும் அப்போதும் வறுமை இருக்கத்தான் செய்தது. இன்று உலகின் ஒரு பாகத்தினர் வறுமையிலும், மற்றொரு பாகத்தினர் வளமையிலும் இருப்பதைக் காண்கிறோம். தம் தேவைக்கு போக எஞ்சிய உணவை கடலில் கொட்டும் நாடுகளையும் காண்கிறோம். மனித நேயமும், சரியான விநியோகமும் இல்லாததே வறுமைக்கு ஒரு காரணமே தவிர ஜனத்தொகைப் பெருக்கமல்ல. உணவின்மை, இடமின்மை தான் காரணம் என்று கூறி ஜனத்தொகையை கட்டுப்படுத்தக் கூறுவது அறிவுடைமையல்ல. இறைவனுக்கு ஏற்புடையதுமல்ல.



வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் (6:151) அவர்களைக் கொலை செய்வது (கடும்) பாவமாகும். (17:31) என்று இறைவன் எச்சரிக்கிறான். எனவே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கு முஸ்லிம்கள் உடன்படுவதில்லை

பலதார மணம் - ஓர் அலச




பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும்.

இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி (
Polygamy) என்பார்கள். இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இரு வகைப்படும்.

1. முதலாவது வகை - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது. இதனை பாலிஜினி (
Polygyny) என்பார்கள்.

2. இரண்டாவது வகை - ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது. இதனை பாலியாண்டரி (
Polyandry) என்பார்கள்.

இக்கட்டுரையின் கருவான முதலாவது வகை, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்படியாக நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குவாட்ரோஜினி (
Quadrogyny) இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் தடை செய்வது ஏன்?

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதிக்கும் இஸ்லாம், பெண்களுக்குத் தடை செய்வது ஏன்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அக்கேள்விக்கு விடை காணும் முயற்சியின் சிந்தனையோட்டமே இக்கட்டுரை.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும், சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கமாகும். ஆணையும், பெண்ணையும் சமமாகவே படைத்த இறைவன், ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும், இயல்புகளையும் கொடுத்துள்ளான். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும், பொறுப்புகளும் உள்ளன. ஆண்களும் பெண்களும் சமமானவர்களே (
Equal) தவிர - அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான தன்மையுடையவர்கள் (Identical) அல்லர்.

ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒரே தந்தைக்குத்தான் பிறந்தது என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயத்தில், ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எவ்விதச் சோதனையுமின்றி எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதானதாக இல்லை. வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.

ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளைச் செய்வது உடலியல் ரீதியாக ஆணுக்கு மிக எளிதாகும். பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் - தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஒரு பெண், மாதவிலக்காகும் கால கட்டங்களில் மனோ ரீதியாகவும் நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் ஏராளமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இத்தகைய பாலியல் நோய்கள் எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். இப்பிரச்சினை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

ஓர் ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஒரே தந்தையான அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?

உதாரணத்திற்கு, ஓர் ஆண் பத்து பெண்களுடன் ஓர் ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்தப் பத்து பெண்களும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்பிருக்கின்றது. அதே சமயத்தில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் பத்து குழந்தைகளைப் பெற முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. (இதனை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. இது போன்று இதுவரை அறியப் படாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். இது போன்ற காரணங்களினால்தான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவனை மணவிலக்கு செய்த பின்னர் குறிப்பிட்ட தவணைக்குப் பிறகு வேறொரு ஆணை மணமுடிக்கவும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை. மேலும், கணவனில்லாத பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நான்கு பெண்கள் வரை திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம்.

உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்து விடுவதுமே இதற்குக் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்ட பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரசசினை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும், நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

தம் பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் கற்பிழந்து வருகின்றனர்.

மேலும் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய மனமில்லாத அயல் விரும்பி விபச்சாரன்களின் உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரித்து வருகிறது.

இயற்கையிலேயே ஆணிணமும் பெண்ணிணமும் பெரும்பாலும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியில் ஆணினத்தை மிஞ்சியதாக பெண்ணினம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தியுடன் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் மரணிப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தாம் அதிகமாக மரணிக்கின்றனர்.

பலதார மணத்தைப் பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன

இக்கட்டுரையில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்

பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:

1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).

3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).

5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (
Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.

புதிய ஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது?

பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் 'பலதார மணம் பற்றி மறுஆய்வு' என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: 'ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதார மணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை.
<Eugee oillman> Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches <New York : Ornis Nooks> 1975- p.140). மேலும், யூத சமூகத்தில் பலதார மணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற, ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) கிரேக்க-ரோம கலாச்சாரத்தை அனுசரித்தே பலதார மணத்தை சர்ச் தடை செய்தது என்ற உண்மையை பாதல் ஊஜீன் ஹில்மேன் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். நம்முடைய இக்காலத்தில், மற்றொரு திருமணம் செய்வது தடை செய்யப்படுவதற்கு ரோம பழக்கவழக்கமே முன்னுதாரணம் எனலாம்.

'பலதார மணம் கிறிஸ்துவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார்.
<The Weekly Review> Aug. 1> 1987. ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றிக் கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்க சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ளும் முறையில், ஆதரவற்றுத் துன்பத்துக்குள்ளாகும் மனைவி, மக்களைக் கருத்தில் கொள்ளும் போது, பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது' எனத் தீர்மானித்துள்ளார்.

பைபிள் சில நேரங்களில் நிர்பந்த பலதார மணத்திற்கு அனுமதிக்கிறது.

'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

பைபிளில் 'ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.

யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது.

ஆப்ரஹாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான 'தல்முதிக்' (
Talmudic) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர், பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.
இந்து மதத்தில் பலதார மணம்

இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.
 
பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள்

ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)

கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.
முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (
COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி '1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்' என்று கூறுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.

1953 ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.

பலதார மணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?

உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவது திருக்குர்ஆன் மட்டும்தான்.

திருக்குர்ஆனின் மனைவியர் (அந்நிஸா) என்னும் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனம் 'உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ, மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)' என்று சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அதே அத்தியாயத்தின் 129 ஆம் வசனத்தில், '(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது' என்று மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதியேயன்றி கட்டாயமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் 4:3 ல் 'சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)' என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் 'சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது' என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார மணத்திற்குத் தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு இஸ்லாத்தில் ஓர் ஆண் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்று வரம்பு கட்டியது. அதுவும் மனைவியரிடையே சமமான நீதி செலுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதி அளித்தது - அனுமதிதான்; கட்டாயமன்று.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரைக் கணவராக ஏற்றுக் கொள்வது அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என்ற இரண்டைத் தவிர மூன்றாவது வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் (இரண்டாம் தாரமான) முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - (பொதுச் சொத்தாக மாறுவதான) இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்த நிலை.

ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே சட்டப்படிச் செல்லுபடியாகின்ற பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமைதான் உருவாகும்.

ஒரு சட்டத்தை இயற்றினால் அது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும் அது இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. 'இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது, ஏனெனில் அவை பழங்காலத்தவை' என்று கூறக்கூடியவர்கள், கூடா உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும்.

இஸ்லாத்தில் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதற்கு இன்னும் வேறு பல காரணங்கள் இருந்தாலும் - தங்களின் மானத்தை மட்டுமல்லாது - முக்கியமாகப் பெண்களின் மானத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்திற்கு சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தை செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது அவ்வளவு தான்.

முஸ்லிம்களுக்கு

பொதுவாக எந்த ஒரு இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், ஒரு முஃமினினுடைய மனநிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை திருமறைக் குர்ஆன் மிகவும் தெளிவாக (அஹ்ஸாப் என்னும்) 33வது அத்தியாயம் 36வது வசனம் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசம் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்'

நமது அறிவுக்கு சரியென்று தோன்றினாலும் அல்லது தவறென்று தோன்றினாலும் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டு விட்டால் அதனை நமது அறிவோடு ஒப்பிட்டு பார்க்காமல் அதனை அப்படியே பின்பற்ற வேண்டியது தான் நம்முடைய கடமையென்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.

வல்ல இறைவன் நம் அனைவரையும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் புரிந்து அதன்படி நடக்க வழிவகை செய்வானாக


ஜிஹாத் என்றால் என்ன




ஜிகாத் என்ற பதம் சரியாக புரிந்துக்கொள்ளப்படாததாக அல்லது தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பலவிதமான பிரச்சினைகளின் மையப்புள்ளியே தவறான புரிதல் தானே
.


ஜிஹாத் என்றால் என்ன?இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.
'முயற்சித்தல்' எனப் பொருள்படும் 'ஜஹத' எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ஜிஹாத்' எனும் பதம். இச்சொல்லுக்கு 'அயராத போராட்டம்', 'விடா முயற்சி', 'கடின உழைப்பு' என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் 'ஜிஹாத்' என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.
2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.
3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்
4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.
இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.
மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்.

'உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்' (60:7)
'மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்'. (60:8)
'நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்'. (60:9)
அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், 'ஜிஹாத்' என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், "உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?" என்றார்கள். அதற்கு அம்மனிதர் "ஆம்!" என்றார். "பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு" என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!" (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது " பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்" எனறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: "உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்". (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.
"பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு".

ஆகவே ஜிகாத் என்பதின் பொருளை அதன் வேர்ச்சொல்லில் இருந்து புரிந்துக்கொண்டோம். மேலும் ஜிகாத் என்றால் "புனிதப் போர்" என்றும் ஊடகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதே அதெல்லாம் கட்டுக்கதையா?

ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?

இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த "ஜிஹாத்".

ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் "புனிதப்போர்" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் "இஸ்லாம்" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த "ஜிஹாத்" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த "ஜிஹாத்" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (இப்னு ஆதம். நன்றி: சத்தியமார்க்கம் .காம்)

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா


ஸ்லாம் அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற பின்பற்றுகின்ற மார்க்கமாகும். எனவே இஸ்லாமானது தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை அவற்றை ஊக்கப்படுத்துவதுமில்லை.

இறைவன் தன் திருமறையிலே கூறுகின்றான்:

(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்கள் அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள்பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை: நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன், 60-8).


முஹம்மது (ஸல்) அவர்கள் போரின் போது போர் வீரர்கள், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்வதைத் தடை செய்திருந்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள், வரம்பு மீறி நடக்காதீர்கள், பிறந்த குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்றும் அறிவுரை கூறி இருக்கின்றார்கள். மேலும், முஸ்லிம்களாகிய உங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளவனை நீங்கள் கொலை செய்தீர்களானால், சொர்க்கத்தின் வாடையைக் கூட உங்களால் நுகர்ந்து பார்க்க முடியாது, அந்த சொர்க்கத்தின் சுகந்தமானது நாற்பது ஆண்டுகள் மணம் வீசக் கூடியது என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.

நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா நெருப்பிலிட்டு ஒருவனுக்கு தண்டனை வழங்குவதையும் முஹம்மது (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத் - ஹதீஸ் எண் : 2675).
ஒரு முறை அவர்கள், ஒரு மனிதரைக் கொலை செய்வதை இரண்டாவது வகைப் பெரும்பாவங்களில் முதன்மையானது எனக்கூறி மறுமைக்குப் பின் உள்ள நியாயத் தீர்ப்பு நாளைப் பயந்து கொள்ளுமாறும், அன்றைய தினம் முதல் விசாரணையாக இரண்டு நபர்களுக்கிமடயே இரத்தம் சிந்தியது சம்பந்தப்பட்ட வழக்குகள் தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 1678, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 6533). விலங்கினங்களைக் கூட இரக்கமுடன் நடத்துமாறும், அவைகளைச் சித்திரவதை செய்வதினின்றும் தவிர்த்துக் கொள்ளுமாறும், மக்களை முஹம்மது (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். ஒரு பெண்மணி ஒரு பூனையைக் கட்டிப்போட்டு உணவேதும் கொடுக்காமல் அந்தப் பூனையைச் சாகடித்த குற்றத்திற்காக அவள் நரகத்தில் போடப்பட்டாள். ஏனெனில் அவள் அந்தப் பூனைக்கு உணவோ, நீரோ எதையும் கொடுக்கவும் இல்லை, தானாகச் சென்று பூமியில் ஊர்ந்து திரியும் பூச்சிகளைக் கூட தன்னுடைய இரையாக தேடிக் கொள்ள அவள் அனுமதிக்கவும் இல்லை, அந்தக் குற்றத்திற்காக அவள் நரகத்தை அடைந்தாள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2422, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2365).
ஒரு தாகமுள்ள நாய்க்கு ஒருவன் தண்ணீர் அருந்தக் கொடுத்த காரணத்தால், அவன் சொர்க்கத்தை அடைந்தான். அப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்கள் கேட்டார்கள், விலங்கினங்களிடம் இரக்கம் காட்டினாலுமா நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் எனக் கேட்டார்கள். உயிருள்ளவற்றிலும், மனிதர்களிடத்திலும் இரக்கம் காட்டுவதால், அதற்கான நற்கூலி இருக்கின்றது, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2244, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2466). திருமறைக் குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின்படியும், நிராயுதபாணிகளானவர்களின் இதயங்களைத் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு அவர்களைப் பயத்தில் ஆழ்த்துவதும், பொதுமக்களின் குடியிருப்புக்கள், சொத்துக்களை அழிப்பதும், ஒன்றுமே அறியாத பெண்களையும்., குழந்தைகளையும் கண்ணி வெடிகொண்டும், ஏவுகணைகள் கொண்டும் தாக்கி அழிப்பதும் (இத்தகைய நாசகார ஆயுதங்கள் யாவும் இன்று நவீன உத்திகளுடன் ஐரோப்பியர்களாலும், அமெரிக்கர்களாலும், இஸ்ரேலியர்களாலும் தான் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுமறியா மக்களின் மீது அவற்றை வீசி அவர்களை அழித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆயுதங்கள் யாவும் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம். இவ்வளவு நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு இன்று முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்) இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதாகும்.

முஸ்லிம்கள் யாவரும் அன்பையும், சாந்தியையும், சமாதானத்தையும், கருணையையும், மன்னித்தலையும் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதத்தை அல்லது மார்க்கத்தைப் பின்பற்றி வருபவர்கள், இன்று ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.
தனிப்பட்ட வகையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வாரேயானால், அவர் இஸ்லாத்தின் பார்வையில், இஸ்லாமியச் சட்டங்களைப் புறந்தள்ளிய குற்றத்திற்கும், அதை மீறிய குற்றத்திற்கும் ஆளான குற்றவாளியாவார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசனங்கள்  அருளப்பட்டால் அந்த வசனங்களையும் உடனே எழுதச் சொல்வார்கள். அதுதோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். இவ்வாறு ஒவ்வொரு  முறை வஹி அருளப்படும்பொழுதும் செய்து வந்தார்கள். இந்த ஆயத்தில் இந்த ஸூராவில் சேர்க்கப்படவேண்டும் என்றும்,இந்த வசனத்திற்குப் பிறகு இந்த வசனம் சேர்க்கப்பட வேண்டும்என்றும் வரிசைப்படுத்தி சொல்வார்கள். அதுபடி எழுதப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலைஹிஸலம்) அவர்களிடம் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசி ஆண்டில் ரமலான் மாதம் அருள்மறை குர்ஆன் முழுவதும் இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

          நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)மரணித்த பிறகு அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்தான்.  அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள். இப்போருக்கு 'யமாமா' என்று பெயர்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.''நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக இருந்தது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துரைத்து விளக்கிய பிறகு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள ஒப்புக் கொண்டார்கள்.
குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து வரச் செய்து பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ஒப்படைத்தார்கள்.ஆரம்பத்தில், அவர்கள்.ஒரு மலையை நகர்த்தி வைக்கச் சொன்னாலும் வைத்திருப்பேன். ஆனால் இப்பணி மிகவும் கடினமானது என்று மறுத்தார்கள். கலீபா அவர்களும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் எடுத்துரைத்தபோது அதற்காக குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து  குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார்கள்.
அலீ(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள்.மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில்அருளப்பட்ட அத்தியாயங்களை அவர்கள் எழுதி.வைத்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலிருந்த எழுதப்பட்ட, ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள். .தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் குர்ஆனை வரிசைப்படுத்தினார்கள்.இவ்வாறு தொகுக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வந்தது.அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த குர்ஆன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும் அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அந்த குர்ஆன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) நாயகி அவர்களிடம் வந்து சேர்ந்தது.
உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சியில். மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து,இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.இதை அறிந்த உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'இந்த குர்ஆனை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
ஸைத் பின் ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்ர் (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும்குழுவுக்கு தலைமை வகித்தவர்கள்.. எனவே குர்ஆன்  பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலியல்லாஹுஅன்ஹு) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு)ஸயீத் பின்அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) , அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரதி எடுத்தல்
        மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது
 
.உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.இந்தப் பணிகளை உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். .அண்ணல்
 
குறியீடுகள் சேர்க்கப்பட்டது

குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவது முக்கியம். அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக  - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா  ( ஸபர் - ஸேர் - பேஷ்) குறியீடுகள் இணைக்கப்பட்டது. அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் குறியீடுகள் அவசியம். ஹிஜ்ரி 66-86 வரை (கி. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாக இருக்கும்

 

 குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா




இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன், அவனாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், குறிப்பாக கிறித்தவ மிஷனரிகள் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருக்குர்ஆனில் சில இடங்களில் நெடில்குறி தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது, ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இவைகளை எடுத்துக்காட்டி குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு' பகுதியில் "எழுத்துப் பிழைகள்' என்ற தலைப்பில் காண்க! இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது. திருக்குர்ஆனை அல்லாஹ்வே எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் இது போன்ற எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான். ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள். பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள். எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது. எனவே தான் "கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது' என்று இவ்வசனம் கூறுகின்றது. உதாரணமாக, 37:68 வசனத்தில் "லா இலல் ஜஹீம்' என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள். குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/420/
Copyright © www.onlinepj.com
இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன், அவனாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், குறிப்பாக கிறித்தவ மிஷனரிகள் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருக்குர்ஆனில் சில இடங்களில் நெடில்குறி தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது, ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இவைகளை எடுத்துக்காட்டி குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு' பகுதியில் "எழுத்துப் பிழைகள்' என்ற தலைப்பில் காண்க! இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது. திருக்குர்ஆனை அல்லாஹ்வே எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் இது போன்ற எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான். ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள். பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள். எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது. எனவே தான் "கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது' என்று இவ்வசனம் கூறுகின்றது. உதாரணமாக, 37:68 வசனத்தில் "லா இலல் ஜஹீம்' என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள். குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/420/
Copyright © www.onlinepj.com
இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன், அவனாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், குறிப்பாக கிறித்தவ மிஷனரிகள் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருக்குர்ஆனில் சில இடங்களில் நெடில்குறி தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது, ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இவைகளை எடுத்துக்காட்டி குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு' பகுதியில் "எழுத்துப் பிழைகள்' என்ற தலைப்பில் காண்க! இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது. திருக்குர்ஆனை அல்லாஹ்வே எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் இது போன்ற எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான். ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள். பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள். எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது. எனவே தான் "கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது' என்று இவ்வசனம் கூறுகின்றது. உதாரணமாக, 37:68 வசனத்தில் "லா இலல் ஜஹீம்' என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள். குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/420/
Copyright © www.onlinepj.com


இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன், அவனாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், குறிப்பாக கிறித்தவ மிஷனரிகள் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருக்குர்ஆனில் சில இடங்களில் நெடில்குறி தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது, ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இவைகளை எடுத்துக்காட்டி குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு' பகுதியில் "எழுத்துப் பிழைகள்' என்ற தலைப்பில் காண்க! இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது. திருக்குர்ஆனை அல்லாஹ்வே எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் இது போன்ற எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான். ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள். பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள். எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது. எனவே தான் "கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது' என்று இவ்வசனம் கூறுகின்றது. உதாரணமாக, 37:68 வசனத்தில் "லா இலல் ஜஹீம்' என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, "ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள். குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று