வெள்ளி, 27 ஜூன், 2014

சுவாக்கத்தில் ஆனுக்கு ஹீருல் ஐயூன் அப்ப பென்னுக்கு??

1. 'ஹூர்' பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.'.

அத்தியாயம் 52 ஸுரத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.'.

அத்தியாயம் 55 ஸூரத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.'.

அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்'.

2. 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அருள்மறை குர்ஆனை மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்பாளர்கள் - குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்துள்ளனர். 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று பொருள் கொண்டால் - அது ஆண்களுக்கு

3. 'ஹூர்' என்ற அரபி வார்த்தையின் பொருள்.

'ஹூர்' என்ற அரபி வார்த்தை 'அஹ்வார்' என்ற அரபிவார்த்தைக்கும் (ஆண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) 'ஹவ்ரா' என்கிற அரபி வார்த்தைக்கும் (பெண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மையான (Plural) வார்த்தை ஆகும். குறிப்பாக சொர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களை உடைய ஆண்பாலரையோ அல்லது பெண் பாலரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவர்.

அருள்மறை குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில்

நீங்கள் 'முத்தஹ்ரதுன்' தூய்மையான மற்றும் புனிதமான 'அஸ்வாஜ்' - இணை, அல்லது துணை அல்லது ஜோடியினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகிறது. 'முத்தஹ்ரதுன்' என்கிற அரபி வார்த்தைக்கு தூய்மை மற்றும் புனிதம் என்று பொருள் கொள்ளலாம்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸூரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் பொதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)

அதே போன்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: அங்குஅவர்களுக்குப் பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)

மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹூர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹூர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும்> ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

4. பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள்.

அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

மாற்று மதத்தவர்களை மக்கா மதினாவிற்கள் அனுமதிக்காதது ஏன்?

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்;கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஷா'.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஷா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.
இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார் - என்பதுதான்.

அன்னை ஆயிஸா

Share link:அன்னை ஆயிஷா (ரழி) › அன்னை ஆயிஷா (ரழி) அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப்... http://neshamudan.blogspot.in/2007/10/blog-post_5670.html?m=1 ——by @UC Browser

கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்?

மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன.

நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.

இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான்.

நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா?

இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள்.

ஸபிய்யா அவர்கள்

கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்' என்று கேட்கிறார். ''நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரலி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் ''அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரலி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். (இன்னொரு அறிவிப்பில் ஏழு அடிமைகளைக் கொடுத்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது)
அடிமைப் பெண்ணாகிய ஸஃபிய்யா அழகு படைத்தவர் என்றிருந்தாலும் அவரை அடிமையாகவே வைத்திருந்திருக்க முடியும். குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரின் மகள் என்று அவருடைய பாரம்பரியத்துக்காக ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து பிறகு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மணப் பெண்ணின் சம்மதமில்லாத திருமணம் செல்லாது என்பதால் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை மணமுடிக்க வில்லை.

மாதவிடாய்க்கான காத்திருப்பு நிகழ்ந்திருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி ஸஃபிய்யாவுடன் உடலுறவு கொண்டார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை வல்லுறவு கொண்டதாக கதையளக்கும் இந்த மன நோயாளியின் இஸ்லாம் பற்றிய விமர்சனம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டார் என்பது உண்மையாக இருந்திருப்பின் அன்றே இஸ்லாம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஸபிய்யா அவர்களின் பாரம்பரியம் மிகவும் வலுவானது. உயர்ந்தது. தந்தை வழியில் ஆரோன் நபியையும், தாய் வழியில், யூதர்களின் மிக உயர்ந்த குலமாகிய குரைஷா (Quraisa) தலைவர் வழி வந்தது. ஸபிய்யா அவர்களது இயற்பெயர் - ஜைனப். முதல் திருமணமாக, யூதர்களில் சிறந்த கவிஞராகிய சல்ம் பின் மிஷ்க்காம் என்பவரை முதலில் மணந்திருந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்பதால், மணமுறிவு பெற்றுக் கொண்டார்கள். பின்னர் யூதர்களில் மிகச் சிறந்த வீரன் ஒருவனை மணந்து கொண்டார்கள்.

கைபர் யுத்தத்தில், கணவன் தந்தை மற்றும் ஏனைய ஆண்கள் பலரும் மறித்து விட, அநாதையான அவர், பங்கீட்டின் மூலம் நபித்தோழர் ஒருவருக்கு வழங்கப்பட்டார். அப்பெண்மணியின் பாரம்பாரியத்தை அறிந்திருந்த மற்ற சில தோழர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

என்ன இருந்தாலும், மிகச்சிறந்த குலம் ஒன்றில் தோன்றிய பெண், அவரது குலப் பெருமைக்கு தகுந்த ஒரு ஆணிடம் தான் ஒப்படைக்கப்படவேண்டுமே தவிர, மற்ற எவரிடத்திலும் கொடுக்கப்படலாகாது என்று வாதிட்டனர்.

ஸ்பிய்யா அவர்களும், தன் குலப் பெருமையை ஒத்திருக்கும் நபி பெருமானார் ஒருவர் மட்டுமே தனக்குத் தகுதியானவர் - அவரிடமே தன்னை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். அதன் படியே அவர் விருப்பத்திற்கிணங்க, அவர் நபிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒப்படைக்கப்பட்டதும், ஸபிய்யா அவர்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நபிகள் தனது பத்தாவது மனைவியை - தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஆயிஷா அவர்கள் இருந்தார்கள்.

ஆயிஷாவிடம் கேட்கிறார்கள் - " ஸபிய்யாவைப் பிடித்திருக்கிறதா?"

" ஆனால், அவர் யூதராயிற்றே..?" நபிகளிடம் மிகவும் உரிமையும், விமர்சனத்தை உள்ளபடிக்கு வைக்கும் திறமையும் பெற்றவர்கள் ஆயிஷா. மற்ற மனைவியர் அனைவரும் - அந்த உரிமையை மரியாதை என்னும் பண்பின்னுள் மறைத்தே வைத்து புழங்குவார்கள். ஆயிஷா மட்டும் தான் எல்லாவற்றையும் "பேசித் தீர்த்துக்" கொள்ளும் வகை.

ஒரு முறை, ஹஃப்ஸா அவர்கள், பெருமானாரைக் கடிந்து பேசி விட, அது அவர் அன்னையின் வழியாக, தந்தை உமர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட, உடனே கோபமுற்று விரைந்து சென்ற உமர், தம் மகளை கடிந்து கொண்டார். அத்துடன் அவருக்கு ஒரு அறிவுரையும் கூறினார் - அது " ஆயிஷாவுடன் போட்டி போட முயலாதே" என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ஆயிஷா அனைவரின் உள்ளத்திலும் பெற்றிருந்த பாசமிகு இடத்தை.

" ஆனால், அவர் யூதராயிற்றே..." என்றதும் நபிகள் அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டாரென்றும், தன் குலப் பெருமைக்குத் தகுந்த இடம் கிட்டினால் மட்டுமே, தன் கௌரவம் பாதுகாக்கப்படும் - Hence to honor her dignity in accordance with her status in the Jews community , தான் மணந்து கொண்டதாக விளக்கம் கொடுத்தார் நபிகள் பெருமானார்.

இஸ்லாமியராகவே அவர் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டாலும், தன் யூத இனத்தாருடன் உண்டான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவில்லை. ஒரு முறை உமர் அவர்கள், ஸபியாவிடம் - "நீங்கள் இன்னமும் யூத பழக்கவழக்கங்களை பாதுகாக்கிறீகள் போலிருக்கிறதே.." என்று பூடகமாக கேள்வி வைத்ததும் - அதற்கு அவர் வெடுக்கென்று பதில் சொல்கிறார் - " எனக்கு சனிக்கிழமையை விட வெள்ளிக் கிழமை மிக்க உவப்பானது " என்று தொடரும் அவர்." என் இனத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்ய இயலாது.." என்றதும் உமர் அவர்களுக்கு வாயடைத்துப் போயிற்று. இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான அறிவு ஸபிய்யா அவர்களுக்கு இருந்தது.

ஏக இறைத்துவத்தை ஏற்றுக் கொண்ட, "the people of the Book - வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் இணக்கம்" இஸ்லாம் இவ்வுலகிறகு வழங்கிய சமத்துவம். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் - ஒரு கேள்வி வைக்கப்படுகிறது - உன் மதத்தின் மூலம் தான் மக்கள் சொர்க்கம் புக முடியுமென்றால், மற்றவர்களின் கதி என்ன? என்ற கேள்வியை, தங்கள் தொடையைத் தட்டிக் கொண்டு வைக்கிறார்கள் - ஏதோ, இஸ்லாத்தை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு.

ஏக இறைவனை வணங்கும் அனைவரும் சொர்க்கம் புகுவர் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்களைத் தவிர வேறு எவரும் சொர்க்கம் புக முடியாது என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான நிபந்தனை - ஏக இறைவன். உலகின் முதல் நபி - ஆதம் அவர்கள் ஏக இறைவனையே வணங்கினார்கள். சொர்க்கம் ஏகினார்கள். ஒவ்வொரு நபிமார்களும் ஏக இறைத்துவத்தைப் போதித்து விட்டுப் போக, பின் வந்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாதை விலகி, தாங்களாகவே பல உருவங்களை குறியீடுகளாக வடிவமைத்து அதன் பின்னர் அதனுள்ளே உறைந்து போய் ஏக இறைவனை மறந்து போனார்கள். அவ்வாறு போனவர்கள் சற்றே திரும்பி, தங்கள் ஆதி மூலத்தை உற்று நோக்கி அலசினார்கள் என்றால், அங்கும் ஏக இறைவனே இருப்பான் என்பதை அறிவார்கள். கைபர் போர் முடிவுக்கு வந்தபோது அங்கிருந்த யூதப் பெண் ஒருவர் விஷமூட்டப்பட்ட ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இவர் - ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முதல் கணவர் - சலாம் பின் மிஷ்கம் என்பவரின் இன்னொரு மனைவி.

மேலும்,

குடும்பத்தாருக்கு நான் பிரியமான பிள்ளையாக இருந்தேன் என்று ஸஃபிய்யா (ரலி) அவர்களே கூறுகிறார்கள்.

நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹுயாய் இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையழனால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை: ''இவர் அவர்தானா?''
(அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்படடவர்தானா?)

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது

சத்தியமாக ஆம்!''

சிறிய தந்தை: ''அவரை நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை: ''ஆம்!''

சிறிய தந்தை: ''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.'' இவ்வாறு யூதராக இருந்த தனது தந்தையின் மன நிலையைப் பற்றி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் விவரிக்கிறார்கள்