வெள்ளி, 27 ஜூன், 2014

ஸபிய்யா அவர்கள்

கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்' என்று கேட்கிறார். ''நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரலி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் ''அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரலி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். (இன்னொரு அறிவிப்பில் ஏழு அடிமைகளைக் கொடுத்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது)
அடிமைப் பெண்ணாகிய ஸஃபிய்யா அழகு படைத்தவர் என்றிருந்தாலும் அவரை அடிமையாகவே வைத்திருந்திருக்க முடியும். குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரின் மகள் என்று அவருடைய பாரம்பரியத்துக்காக ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து பிறகு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மணப் பெண்ணின் சம்மதமில்லாத திருமணம் செல்லாது என்பதால் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை மணமுடிக்க வில்லை.

மாதவிடாய்க்கான காத்திருப்பு நிகழ்ந்திருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி ஸஃபிய்யாவுடன் உடலுறவு கொண்டார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை வல்லுறவு கொண்டதாக கதையளக்கும் இந்த மன நோயாளியின் இஸ்லாம் பற்றிய விமர்சனம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டார் என்பது உண்மையாக இருந்திருப்பின் அன்றே இஸ்லாம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஸபிய்யா அவர்களின் பாரம்பரியம் மிகவும் வலுவானது. உயர்ந்தது. தந்தை வழியில் ஆரோன் நபியையும், தாய் வழியில், யூதர்களின் மிக உயர்ந்த குலமாகிய குரைஷா (Quraisa) தலைவர் வழி வந்தது. ஸபிய்யா அவர்களது இயற்பெயர் - ஜைனப். முதல் திருமணமாக, யூதர்களில் சிறந்த கவிஞராகிய சல்ம் பின் மிஷ்க்காம் என்பவரை முதலில் மணந்திருந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்பதால், மணமுறிவு பெற்றுக் கொண்டார்கள். பின்னர் யூதர்களில் மிகச் சிறந்த வீரன் ஒருவனை மணந்து கொண்டார்கள்.

கைபர் யுத்தத்தில், கணவன் தந்தை மற்றும் ஏனைய ஆண்கள் பலரும் மறித்து விட, அநாதையான அவர், பங்கீட்டின் மூலம் நபித்தோழர் ஒருவருக்கு வழங்கப்பட்டார். அப்பெண்மணியின் பாரம்பாரியத்தை அறிந்திருந்த மற்ற சில தோழர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

என்ன இருந்தாலும், மிகச்சிறந்த குலம் ஒன்றில் தோன்றிய பெண், அவரது குலப் பெருமைக்கு தகுந்த ஒரு ஆணிடம் தான் ஒப்படைக்கப்படவேண்டுமே தவிர, மற்ற எவரிடத்திலும் கொடுக்கப்படலாகாது என்று வாதிட்டனர்.

ஸ்பிய்யா அவர்களும், தன் குலப் பெருமையை ஒத்திருக்கும் நபி பெருமானார் ஒருவர் மட்டுமே தனக்குத் தகுதியானவர் - அவரிடமே தன்னை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். அதன் படியே அவர் விருப்பத்திற்கிணங்க, அவர் நபிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒப்படைக்கப்பட்டதும், ஸபிய்யா அவர்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நபிகள் தனது பத்தாவது மனைவியை - தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஆயிஷா அவர்கள் இருந்தார்கள்.

ஆயிஷாவிடம் கேட்கிறார்கள் - " ஸபிய்யாவைப் பிடித்திருக்கிறதா?"

" ஆனால், அவர் யூதராயிற்றே..?" நபிகளிடம் மிகவும் உரிமையும், விமர்சனத்தை உள்ளபடிக்கு வைக்கும் திறமையும் பெற்றவர்கள் ஆயிஷா. மற்ற மனைவியர் அனைவரும் - அந்த உரிமையை மரியாதை என்னும் பண்பின்னுள் மறைத்தே வைத்து புழங்குவார்கள். ஆயிஷா மட்டும் தான் எல்லாவற்றையும் "பேசித் தீர்த்துக்" கொள்ளும் வகை.

ஒரு முறை, ஹஃப்ஸா அவர்கள், பெருமானாரைக் கடிந்து பேசி விட, அது அவர் அன்னையின் வழியாக, தந்தை உமர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட, உடனே கோபமுற்று விரைந்து சென்ற உமர், தம் மகளை கடிந்து கொண்டார். அத்துடன் அவருக்கு ஒரு அறிவுரையும் கூறினார் - அது " ஆயிஷாவுடன் போட்டி போட முயலாதே" என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ஆயிஷா அனைவரின் உள்ளத்திலும் பெற்றிருந்த பாசமிகு இடத்தை.

" ஆனால், அவர் யூதராயிற்றே..." என்றதும் நபிகள் அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டாரென்றும், தன் குலப் பெருமைக்குத் தகுந்த இடம் கிட்டினால் மட்டுமே, தன் கௌரவம் பாதுகாக்கப்படும் - Hence to honor her dignity in accordance with her status in the Jews community , தான் மணந்து கொண்டதாக விளக்கம் கொடுத்தார் நபிகள் பெருமானார்.

இஸ்லாமியராகவே அவர் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டாலும், தன் யூத இனத்தாருடன் உண்டான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவில்லை. ஒரு முறை உமர் அவர்கள், ஸபியாவிடம் - "நீங்கள் இன்னமும் யூத பழக்கவழக்கங்களை பாதுகாக்கிறீகள் போலிருக்கிறதே.." என்று பூடகமாக கேள்வி வைத்ததும் - அதற்கு அவர் வெடுக்கென்று பதில் சொல்கிறார் - " எனக்கு சனிக்கிழமையை விட வெள்ளிக் கிழமை மிக்க உவப்பானது " என்று தொடரும் அவர்." என் இனத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்ய இயலாது.." என்றதும் உமர் அவர்களுக்கு வாயடைத்துப் போயிற்று. இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான அறிவு ஸபிய்யா அவர்களுக்கு இருந்தது.

ஏக இறைத்துவத்தை ஏற்றுக் கொண்ட, "the people of the Book - வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் இணக்கம்" இஸ்லாம் இவ்வுலகிறகு வழங்கிய சமத்துவம். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் - ஒரு கேள்வி வைக்கப்படுகிறது - உன் மதத்தின் மூலம் தான் மக்கள் சொர்க்கம் புக முடியுமென்றால், மற்றவர்களின் கதி என்ன? என்ற கேள்வியை, தங்கள் தொடையைத் தட்டிக் கொண்டு வைக்கிறார்கள் - ஏதோ, இஸ்லாத்தை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு.

ஏக இறைவனை வணங்கும் அனைவரும் சொர்க்கம் புகுவர் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்களைத் தவிர வேறு எவரும் சொர்க்கம் புக முடியாது என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான நிபந்தனை - ஏக இறைவன். உலகின் முதல் நபி - ஆதம் அவர்கள் ஏக இறைவனையே வணங்கினார்கள். சொர்க்கம் ஏகினார்கள். ஒவ்வொரு நபிமார்களும் ஏக இறைத்துவத்தைப் போதித்து விட்டுப் போக, பின் வந்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாதை விலகி, தாங்களாகவே பல உருவங்களை குறியீடுகளாக வடிவமைத்து அதன் பின்னர் அதனுள்ளே உறைந்து போய் ஏக இறைவனை மறந்து போனார்கள். அவ்வாறு போனவர்கள் சற்றே திரும்பி, தங்கள் ஆதி மூலத்தை உற்று நோக்கி அலசினார்கள் என்றால், அங்கும் ஏக இறைவனே இருப்பான் என்பதை அறிவார்கள். கைபர் போர் முடிவுக்கு வந்தபோது அங்கிருந்த யூதப் பெண் ஒருவர் விஷமூட்டப்பட்ட ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இவர் - ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முதல் கணவர் - சலாம் பின் மிஷ்கம் என்பவரின் இன்னொரு மனைவி.

மேலும்,

குடும்பத்தாருக்கு நான் பிரியமான பிள்ளையாக இருந்தேன் என்று ஸஃபிய்யா (ரலி) அவர்களே கூறுகிறார்கள்.

நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹுயாய் இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையழனால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை: ''இவர் அவர்தானா?''
(அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்படடவர்தானா?)

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது

சத்தியமாக ஆம்!''

சிறிய தந்தை: ''அவரை நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை: ''ஆம்!''

சிறிய தந்தை: ''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.'' இவ்வாறு யூதராக இருந்த தனது தந்தையின் மன நிலையைப் பற்றி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் விவரிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக