காபிர் என்றால் யார் ?
ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது.
அல் குர்ஆன் சொல்லும் ஏகனான அல்லாஹ் யார்?
(நபியே!) நீர் கூறுவீராக: (ஆதியும் அந்தமும் இல்லா) அல்லாஹ் அவன் ஏகன் .[112:1]
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.[112:2]
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.[112:3]
அன்றியும், அவனுக்கு இணையாக எதுவும் இல்லை.[112:4]
முஸ்லிம்கள் இறைவனின் வேதம் என்று உறுதியாக விசுவாசிக்கின்ற புனித அல் குர்ஆன் இறைவன் சம்பந்தமாக இவ்வாறு குறிப்பிடுகிறது.
அல் குர்ஆன் குறிப்பிடுன்ற ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது.
அல் குர் ஆன் குறிப்பிடும் இந்தத்தகுதிகளுக்கு மாற்றமாக அல்லாஹ்வை ......இறைவனை நினைப்பது அல்லது கருதுவது தெய்வ நிந்தனையாகும்.
யாராகிலும் ஒருவர் அல் குர் ஆன் குறிப்பிடும்
இந்த அல்லாஹ்வை நிராகரித்தால் அவரை அல்லது அத்தகைய மக்களை "காபிர்" என்று
இஸ்லாம் கருதுகிறது.
அல் குர் ஆன் குறிப்பிடுகின்ற இந்த அல்லாஹ்வை
அல்லது ஏகனான இறைவனை ஏற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பகரமாக அல்லது இணையாக
வேறு கடவுளை அல்லது கடவுளர்களை விசுவாசிக்கும் மக்களையும் இஸ்லாம் "காபிர்"
என்றழைக்கிறது.
அவர்களுடன், அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த அல்லாஹ்வுடன் வேறு இறைவனை அல்லது
கடவுளர்களை இணையாக கருதுகிறவர்களையும் இஸ்லாம் "காபிர்" என்று வரையறை
செய்கிறது.
அல் குர்ஆன் விளக்கியிருக்கும் அல்லாஹ்வை
சொல்லளவில் ஏற்றுக் கொண்டு உள்ளத்தில் அந்த இறைவனுக்கு நிகராக அல்லது
இணையாக யாராகிலும் ஒருவரை அல்லது ஒரு குழுவினரை அல்லது ஒரு அமைப்பை அல்லது
ஒரு நாட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களையும் இஸ்லாம் "காபிர்" என்று
வர்ணிக்கிறது.
இறைவனை அல்லது கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்று
தன்னை அழைத்துக் கொள்கின்ற இணைய நண்பர் அன்புராஜ் போன்ற ஒருவர் அல் குர்ஆன்
குறிப்பிடுகின்ற அல்லாஹ்வை தனது கடவுளாக அல்லது இறைவனாக ஏற்றுக்
கொண்டிருந்தால் அவர் முஸ்லிமாக,கிறிஸ்தவராகஅல்லது யூதராக இல்லாத நிலையிலும்
இஸ்லாம் அவரை "காபிர்" என்று அழைப்பதில்லை.
அவர் உண்மை இறை விசுவாசியாவார்.
ஆனால்,துரதிர்ஷ்ட வசமாக இறைவனை அல்லது கடவுளை
விசுவாசிக்கின்ற ஒருவர் அல் குர் ஆன் குறிப்பிடும் அல்லாஹ்வை ...ஏகனான
இறைவன் அல்லாத பிறிதொரு இறைவனை விசுவாசித்தால் அவர் "காபிரா"வார்.
அல் குர்ஆன் விளக்கியிருக்கின்ற ஏகனான
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியை அவனது தூதராக ஏற்றுக்
கொண்டிருக்கும் மக்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.அதனால்,
அல் குர் ஆனின் கருத்தியலின் பிரகாரம் முஸ்லிம்கள் காபிர்கள் அல்ல.
இறை விசுவாசிகள்.
அந்த அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்டு
அவனது தூதராக நபி ஈஸாவை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் கிறிஸ்தவர்களாகும்.
ஆகவே, அல் குர்ப ஆனின் போதனையின் பிரகாரம் கிறிஸ்தவர்கள் காபிர்கள்
அல்ல.இவர்களும் இறை விசுவாசிகள்.
அதே போன்று அல் குர் ஆன் இனம் காட்டியிருக்கும்
அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்டு நபி மூஸாவை அவனது தூதராக
ஏற்றிருக்கும் மக்கள் யூதர்களாகும்.இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அந்த
யூத மக்களும் காபிர்கள் அல்ல.இறைவனையும் நபி மூஸாவையும் ஏற்றுக் கொண்ட இந்த
சமூகத்தவர்களும் இறை விசுவாசிகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக