திங்கள், 3 ஆகஸ்ட், 2015

ஒளரங்கசீப் இந்துக்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதித்து தன் மத வெறியை வெளிப்படுத்தியது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

ஜிஸ்யா வரி உலக நாடுகளில் மத்திய கால முஸ்லிம் அரசுகளால் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதென்பது உண்மையாகும். அதுபோல முகலாய மன்னரான ஒளரங்கசீப்பும் ஜிஸ்யா வரிவிதித்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது. ஆனால் அதற்குரிய காரணத்தை வரலாற்று ஆசிரியர்கள் விளக்காமல் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தி வைத்தனர்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குட்பட்டது மிகப்பெரும் பேரரசாக இருந்தது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த ராணுவத்தில் மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாகவே இருந்தனர். இந்துக்களும், அதிக அளவில் ராணுவத்தில் சேருங்கள் என்று அழைப்ப விடுத்த போது மிக சொற்பமானவர்களே ராணுவத்தில் இளைந்தனர். இதனால் இராணுவத்தில் சேவை புரிய முன்வராத இந்துக்கள் ஜிஸ்யா (வரி)யாக ஒரு இராணுவ வீரனுக்கு தேவையான உணவை அல்லது அதற்கு ஈடான தொகையை வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். இராணுவ சேவையாற்றும் இந்து குடும்பத்தினருக்கு இந்த வரி விதிக்கப்படுவதில்லை என்றார்.

அதற்கு முன்பே கி.பி.714-வ் சிந்து வழியாக இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த இளம் தளபதி முஹம்மது பின் காசிம் அரசாங்க வருமானத்திற்காக முஸ்லீம்களிடம் ஜகாத்தையும், முஸ்லீமல்லாதவர்களிடம் 'ஜிஸ்யாவையும்' வசூலித்தார். ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் அல்லது அவர் தமது முன்னோர்களின் மதத்தை ஏற்றுக் கொண்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று பிரகடனம் செய்தார்.

முஹம்மது பின் காசிம் அவர்களுக்கு பின் வந்த முஸ்லீம் மன்னர்கள் ஒளரங்கசீப் வரை, தாங்கள் இஸ்லாத்தை தூய்மையான நிலையில் வாய்மையான முறையில் பின்பற்றினார்களோ இல்லையோ முஸ்லீமல்லாதவர்களின் உரிமைகளை அதிகமாகவே பேணி வந்தனர். ஒளரங்கசீப் தொப்பியும் தொழுகை விரிப்பும் செய்து விற்று அதில் தனது செலவை கவனித்து வந்தார். எனினும் அவரை மதவெறியர் என்று வர்ணித்தனர். உண்மையில் ஒளரங்கசீப் ஆட்சி காலத்திலும் சரி, முந்தைய ஆட்சி காலத்திலும் சரி இந்துக்கள் ஒரு போதும் எவ்விதமான மதச்சார்பான கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டதில்லை.

ஒளரங்கசீப்பின் அரசபையில் வங்காள கவர்னராக இருந்தவர் வள்ளல் சீதக்காதி அவர்கள் ஆவார்கள். அவரை சேதுபதி மன்னன் தன் உறவு முறையில் ஒருவராக ஏற்றுக் கொண்டு பட்டத்து பெரிய தம்பியாக ஆக்கினார். சேதுபதி மன்னர் இவருக்கு ரவிகுல ரகுநாத முத்து விஜய பெரிய தம்பி பட்டத்து மரைக்காயர் எனப் பட்டம் கொடுத்து சிறப்பித்தார். வள்ளல் சீதக்காதி அவர்களிடமே ஒளரங்கசீப் தம் பூமியான இராமேஸ்வரத்தில் இராமநாதன் கோவிலைக் கட்டும் பணியையும் ஒப்படைத்து அதை அவர் செய்து முடித்து சமயங்களிற்கப்பால் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்திய வரலாறு இன்று வரை நிமிர்ந்து நிற்கிறது. இதே சிற்பிகளையும் கற்களையும் வைத்து கீழ்க்கரையில் ஒரு பள்ளி வாசலையும் கட்டியுள்ளார். ஒளரங்கசீப்பை மதவெறியர் என்று கூறுவது ஒரு பொய்யான இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டாகும். ஜிஸ்யா வரியை வசூலித்ததன் நோக்கமே போரில் கலந்து கொள்ள இயலாத முஸ்லீமல்லாத குடிமக்களின் பாதுகாப்பையும் கருதி தான் என்ற உண்மையை எவரும் மறந்து விடக்கூடாது.

அதுபோல இஸ்லாமிய ஆட்சியின் கீழ்வந்த கிறிஸ்தவர்களிடமும், ஒரு போதும் எவ்விதமான மத சார்பான கொடுமை நிகழ்த்தப்பட்டதில்லை என்பதையும் இங்கு வலியுறுத்தி கூற வேண்டும்.

வு.று. ஆர்னல்டின் தான் எழுதிய வுhந Pசநயஉhiபெ ழக ஐளடயஅ எனும் நூலில் கூறுகிறார். 'எகிப்திய கிராமவாசிகள் மதத்தினால் முஸ்லீம்களாக இருந்தும் கூட, கிறிஸ்தவர்களைப் போலவே இராணுவச் சேவையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டமைக்காக அவர்கள் மீது வரி வதிக்கப்பட்டது. உடல் வலிமையுள்ள ஆண்கள் மீதே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. அவர்கள் முஸ்லீம்களாக இருந்திரும் பின் இராணுவச் சேவைக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள். அதற்குப் பதிலாகவே அவ்வரி விதிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் முஸ்லீம் ராணுவத்துடன் இணைந்து சேவை புரிந்த போது அவர்களுக்கு அவ்வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. 'அர்ஜீராஜிமா' என்ற கிறிஸ்துவ பிரிவினர் முஸ்லீம்களோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு அவர்கள் நேசமாக இருந்து அவர்களுடைய அணியில் யுத்தம் செய்வதாகவும் வாக்களித்தார்கள். அதற்கு நிபந்தனையாக ஜிஸ்யா வரியிலிருந்து விதிவிலக்கையும், யுத்தத்தில் கிடைக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குரிய பங்கையும் அவர்கள் கோரியிருந்தார்கள்.

-ஆக ஜிஸ்யா வரி வதித்ததில் எந்த வகையிலும் ஒரு மதப்பாகுபாடான காரியமல்ல என்று நடுநிலையாளர்கள் விளங்கிக் கொள்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக